
அப்பா கிருஷ்ணாவுக்கு நினைவாலயம் கட்ட உள்ள மகேஷ் பாபு
அவர்களது குடும்பத்தினருக்குச் சொந்தமான பத்மாலயா ஸ்டுடியோ ஐதராபாத்தில் உள்ளது. அந்த இடத்தில் கிருஷ்ணாவுக்காக ஒரு நினைவாலயம் கட்டி, அதில் அவரது உருவச் சிலை, அவர் வாங்கிய விருதுகள், அவரது படங்கள் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் என அனைத்தும் இடம் பெறும் வகையில் உருவாக்கப் போகிறாராம். தெலுங்கு நடிகர் ஒருவருக்கு இதுவரையிலும் யாரும் இப்படி ஒரு நினைவாலயம் அமைத்ததில்லை என்று சொல்லுமளவிற்கு அது இருக்க வேண்டும் என்பது மகேஷ்பாவுன் திட்டம் என்கிறார்கள். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வரலாம் என்பது டோலிவுட் தகவல்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!