
ரூ.400 கோடியைக் கடந்த காந்தாரா
"பொன்னியின் செல்வன்" படத்தின் இரண்டு பாகங்களும் சேர்ந்து 200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட் என்கிறார்கள். முதல் பாகத்திற்கான செலவு 100 கோடிக்கும் கூடுதலாக இருக்கலாம். அதே சமயம், "காந்தாரா" படம் வெறும் 16 கோடி ரூபாய் செலவில் மட்டுமே எடுக்கப்பட்ட ஒரு படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் 170 கோடி, வட இந்தியாவில் 95 கோடி, தெலுங்கில் 60 கோடி, வெளிநாடுகளில் 45 கோடி, கேரளாவில் 20 கோடி, தமிழகத்தில் 12 கோடி என இப்படம் 400 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "கேஜிஎப் 2" படத்திற்குப் பிறகு கன்னடப் படமான "காந்தாரா" 400 கோடி வசூலைக் கடந்துள்ளது. இரண்டு படங்களுமே இந்த ஆண்டில் வெளிவந்தவை என்பது முக்கியமானது.
100 கோடி பட்ஜெட்டில் தயாரான "கேஜிஎப் 2" படம் 1200 கோடி வரை வசூலித்தது என்கிறார்கள். இரண்டு படங்களின் லாபத்தையும் சேர்த்தால் 1500 கோடி வரும். இந்திய சினிமாவில் இந்த வருடத்தில் வேறு எந்த மொழிப் படங்களும் இப்படி ஒரு சாதனையைப் படைத்ததில்லை. இந்த இரண்டு கன்னடப் படங்களின் வசூல், லாபம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!