
விபத்துக்கு பிறகு மகேஷ்பாபு படத்தில் நடிக்க தயாராகும் பூஜா ஹெக்டே
இந்த நிலையில் தற்போது அவர் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், விபத்துக்கு பிறகு தான் நன்றாக தேறி வருவதாக தெரிவித்திருக்கும் பூஜா ஹெக்டே விரைவில் திரிவிக்கிரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் அவரது 28வது படத்தில் நடிப்பதற்கு தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா சமீபத்தில் இறந்ததை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் டிசம்பர் மாதம் மீண்டும் மகேஷ்பாபு 28வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். அப்போது மகேஷ் பாபுவுடன் இணைந்து பூஜா ஹெக்டேவும் நடிக்க இருக்கிறார். மேலும் இதற்கு முன்பு தெலுங்கில் மகரிஷி என்ற படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!