
பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைவு
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட அன்றைய திரை ஜாம்பவான்களின் படங்களுக்கு வசனம், கதை, திரைக்கதை அமைத்துள்ள, ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் மட்டுமே எழுதி உள்ளார். "பெண் என்றால் பெண்" என்ற படத்தையும் இயக்கி உள்ளார். இயக்குநர் ஏசி திருலோகசந்தருக்கும், ஆரூர்தாஸ்க்கும் உள்ள நட்பு, நகமும் சதையும் போன்றது. இவர்களது கூட்டணியில் பல வெற்றி படங்கள் உருவாகின.
சில மாதங்களுக்கு முன்பு தான் திரைத்துறையில் இவரது சாதனையை கவுரவிக்கும் விதமாக கலைஞர் நினைவு கலைத்துறை வித்தர் விருது வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் இந்த விருதை அவரது இல்லத்திற்கே சென்று வழங்கினார்.
சென்னை, தி.நகரில் உள்ள ஆரூர்தாஸின் இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு திங்கள் அன்று நண்பகல் 12 மணியளவில் நடைபெறுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!