
தனி கதாநாயகியாக அடுத்த ஹிட் கொடுத்த சமந்தா
சமந்தா நடித்து தெலுங்கில் தயாரான "யசோதா" படம் தமிழிலும் டப்பிங் ஆகி இரண்டு தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. புதிய கதைக்களம், சமந்தா கதாபாத்திரத்தின் சஸ்பென்ஸ், அவரது நடிப்பு என படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ள ஒரு படமாக அமைந்துவிட்டது. தமிழகத்தில் மழை காரணமாக வசூல் பாதிக்கப்பட்டாலும் விமர்சனங்கள் பாசிட்டிவ்வாக வந்துள்ளன. அதே சமயம், ஆந்திரா, தெலுங்கானாவில் படம் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபீசில் படம் வெற்றி பெற்றுவிடும் என்று பேசிக் கொள்கிறார்கள்.
சமந்தா தனி கதாநாயகியாக நடித்த முதல் படமான "யு டர்ன்" தமிழ், தெலுங்கில் இரு மொழிப் படமாக வெளிவந்தாலும் தோல்வியைத் தழுவியது. அடுத்து அவர் தனி கதாநாயகியாக நடித்து வெளிவந்த தெலுங்குப் படமான "ஓ பேபி" வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. மூன்று வருடங்களுக்குப் பிறகு சமந்தா மீண்டும் தனி கதாநாயகியாக நடித்து வெளிவந்துள்ள "யசோதா" படமும் வெற்றிப் படமாக அமைய உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!