
ஓடிடி தளத்தில் உடனுக்குடன் படத்தை வெளியிட தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு
இதனால் வசூல் பாதிப்பதாக தியேட்டர் அதிபர்கள் கருதுகிறார்கள். படம் தியேட்டரில் வெளியான 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். தற்போது தயாரிப்பாளர் சங்கம் இரண்டாக பிரிந்து வலுவிழந்திருப்பதால் இதனை கண்டிப்புடன் செயல்படுத்த முடியவில்லை. இதனால் தியேட்டர் அதிபர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில் தியேட்டர் அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் சங்க உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் "தயாரிப்பாளர் சங்கம் கேஆர்ஜி, ராம நாராணயன் காலத்தில் சிறப்பாக செயல்பட்டது. சமீபகாலமாக புதிய படங்கள் ஓடிடியில் வெளியிடப்படுவது குறித்து தயாரிப்பாளர் சங்கம் அக்கறை காட்டவில்லை. இதனால் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே இது குறித்து முக்கியமான ஒரு முடிவெடுக்க வேண்டியது இருக்கிறது. இதுகுறித்து ஒரு கலந்தாய்வு கூட்டத்தை தியேட்டர் அதிபர்கள் சங்கம் நடத்த இருக்கிறது" என்று எழுதியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!