
புதுமுகங்கள் உருவாக்கும் என்னை மாற்றும் காதலே
பி.ஜலபதி இயக்கி உள்ளார். படத்தைப் பற்றி அவர் கூறியதாவது: கிராமத்திலிருந்து கல்லூரி படிப்பிற்காக பட்டணம் வருகிறான் நாயகன். அங்கு நாயகியை பார்க்கிறான். அவளை விடாமல் துரத்தி காதலை வெளிப்படுத்த துடிக்கிறான். அவளோ தனக்கு நிறைய லட்சியங்கள் இருப்பதாக கூறி அவன் காதலை நிராகரிக்கிறாள்.
இதனால் நாயகன் எடுக்கும் முடிவினால் அதிர்ச்சியின் எல்லைக்கே செல்கிறாள் நாயகி. அந்த முடிவு என்ன? அதனால் நடந்தது என்ன? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லி இருக்கிறேன். காதலிப்பவர்களுக்கு மட்டுமல்ல , காதலிக்க நினைப்பவர்களுக்கும், காதலிக்காமல் இருக்கும் அத்தனை பேருக்கும் இந்த படம்பிடிக்கும். என்கிறார் இயக்குனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!