
அடுத்தடுத்து தமிழில் நடிக்கும் தெலுங்கு நடிகர் சுனில்
கடந்தாண்டு பான் இந்தியா படமாக வெளிவந்து வெற்றி பெற்ற "புஷ்பா" படத்தில் "மங்களம் சீனு" என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்தும் மிரட்டியிருந்தார். அவர் தற்போது தமிழில் அடுத்தடுத்து இரண்டு முக்கிய படங்களில் நடிக்கும் அறிவிப்பு நேற்று வெளியானது.
ராஜு முருகன் இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் "ஜப்பான்" படத்தில் சுனில் நடிக்க உள்ளதாக நேற்று அப்படத்தின் பூஜை முடிந்ததும் அறிவித்தார்கள். அதன்பின் நேற்று மாலையில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் "மாவீரன்" படத்திலும் சுனில் நடிக்கிறார் என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள். ஒரே நாளில் தமிழில் இரண்டு படங்களில் சுனில் நடிக்க உள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படங்கள் மூலம் தமிழிலும் அறிமுகமாகிறார் சுனில். முதல் படமாக அநேகமாக "மாவீரன்" படம்தான் வெளியாகும் எனத் தெரிகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!