
யசோதா, டிரைவர் ஜமுனா - ஒரே நாளில் இரண்டு பெண்களின் போராட்டப் படங்கள்
இந்த வாரம் நவம்பர் 11ம் தேதி சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள "யசோதா" படம் தமிழ், தெலுங்கிலும், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள "டிரைவர் ஜமுனா" படமும் வெளியாகிறது. இரண்டு படங்களிலும் கதாநாயகிகளின் போராட்டம்தான் படத்தின் மையக்கருவாக இருக்கிறது.
"யசோதா" படத்தில் சமந்தா, வாடகைத் தாய் கதாபாத்திரத்தில் நடித்துளளதாகத் தெரிகிறது. "டிரைவர் ஜமுனா" கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா பெண் டாக்சி டிரைவராக நடித்திருக்கிறார். இவர்கள் தங்களது வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்கள்தான் இந்தப் படங்களின் கதை. பெண்களை முன்னிலைப்படுத்தும் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளிவருவது ஆச்சரியம்தான்.
அந்தப் படங்களோடு நவம்பர் 11ம் தேதியன்று "மிரள், பரோல், திருமாயி" ஆகிய படங்களும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!