
ஒரு கோடி பார்வை, ஒரு மில்லியன் லைக்ஸ் கடந்த ரஞ்சிதமே
விஜய் நடிக்கும் ஒரு படத்திற்கு தமன் இசையமைப்பது இதுவே முதல் முறை. அதனால், இந்த முதல் சிங்கிளில் வெளியீடு குறித்து அவர் ஆர்வத்துடன் காத்திருந்தார். பாடலும் அதிரடியாக இருந்ததால் விஜய்யின் அதி வேக நடனம், ராஷ்மிகாவின் கிளாமர், அரங்க அமைப்பு, நடன இயக்குனர் ஜானியின் வழக்கமான நடனம் என பாடல் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டது. முந்தைய விஜய் படங்களின் சூப்பர் ஹிட் பாடல்களின் யூடியுப் சாதனையை இந்தப் பாடல் கடக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் "ரஞ்சிதமே" தமிழில் மட்டும்தான் வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்குப் பாடல் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!