
நவம்பர் 4 வெளியீட்டில் முன்னணியில் லவ் டுடே
இந்த நவம்பர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் ""4554, காபி வித் காதல், கண்டேன் உன்னை தந்தேன் என்னை, லவ் டுடே, நித்தம் ஒரு வானம், ஒன் வே,” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் "லவ் டுடே, நித்தம் ஒரு வானம்" ஆகிய இரண்டு படங்களுக்கு மட்டுமே பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்துள்ளன. இருப்பினும் "நித்தம் ஒரு வானம்" படத்திற்கு ரசிகர்களின் வருகை குறைவாகவே உள்ளது. அதே சமயம் "லவ் டுடே" படம் இளம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இப்படத்திற்கு குடும்பத்துடன் ரசிகர்கள் வர வாய்ப்பில்லை என்றாலும் அந்தக் குறையை இளைஞர்கள் போக்கிவிட வாய்ப்புள்ளது.
ஏற்கனவே, "லவ் டுடே" படம் "டேபிள் பிராபிட்" பார்த்துவிட்டது என்பதுதான் கோலிவுட் தகவல். தியேட்டர் வசூல் அவர்களுக்குக் கூடுதல் லாபம்தான். பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன் ஆகியோருக்குப் பிறகு இயக்கம், நடிப்பு என இரண்டிலும் வெற்றி பெற்றவர்கள் மிக மிகக் குறைவு. அந்த வரிசையில் 14 வருடங்களுக்கு முன்பு "சுப்பிரமணியபுரம்" படம் மூலம் சசிகுமார் இடம் பிடித்தார். ஆனால், அவரும் அதற்குப் பிறகு இயக்கத்தையும், நடிப்பையும் சேர்ந்து செய்யவில்லை. அவருக்கு அடுத்து தற்போது இந்த "லவ் டுடே" படம் மூலம் பிரதீப் ரங்கநாதன் இடம் பிடித்திருக்கிறார். இவர் தொடர்ந்து இயக்கத்தையும், நடிப்பையும் சேர்ந்து செய்வாரா என்பது விரைவில் தெரிய வரும்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!