
எல் விஜயலட்சுமிக்கு என்டிஆர் விருது வழங்கி கவுரவிப்பு
தெலுங்கில் மறைந்த நடிகரும் முன்னாள் முதல்வருமான என்டிஆருடன் 80 படங்களில் நடித்தவர். தற்போது தெலுங்குத் திரையுலகத்தில் என்டிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடிகை எல் விஜயலட்சுமிக்கு என்டிஆர் நூற்றாண்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் என்டிஆரின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா உள்ளிட்ட பல தெலுங்கு சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் எல் விஜயலட்சுமியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி அவரைப் பற்றிப் பாராட்டிப் பேசினார் பாலகிருஷ்ணா. 1959 முதல் 1969 வரை 100 படங்களில் நடித்த விஜயலட்சுமி என்டிஆருடன் மட்டும் 80 படங்களில் நடித்துள்ளார். இந்த விருது பெருவதற்காக அமெரிக்காவிலிருந்து ஐதராபாத் வந்து பெற்றுக் கொண்டார் விஜயலட்சுமி.
1969ல் தனது சகோதரரின் நண்பரைத் திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு விலகியபோது விஜய லட்சுமி பத்தாவது படிப்பைக் கூட முடிக்கவில்லை. அதன் பிறகு தனியாகத் தேர்வு எழுதி பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தபால் மூலம் படித்து பட்டம் பெற்றார். பிலிப்பைன்ஸ் நாட்டில் சில காலம் வாழ்ந்த பிறகு அதன்பின் அமெரிக்காவிற்கச் சென்று செட்டிலானார். அங்கு ஆடிட்டிங் படிப்பை படித்து முடித்து விர்ஜினியா பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். தற்போது அக்கவுண்டசி படிப்பை ஓய்வு நேரங்களில் கற்றுத் தருகிறார் 80 வயது ஆன எல் விஜயலட்சுமி.
அதனால்தான், பாலகிருஷ்ணா பேசுகையில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் அடையாளமாக எதிர்கால சந்ததியினருக்கு விஜயலட்சுமி முன்னுதாரணமாய் இருக்கிறார் எனப் பாராட்டினார்.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!