
ரஜினிகாந்துடன் குஷ்பூ சந்திப்பு
இந்த நிலையில் கிட்டத்தட்ட 34 வருடங்களாக தனது அறிமுகப்படமான தர்மத்தின் தலைவன் படத்திலிருந்து கடந்த வருடம் அண்ணாத்த படம் வரை தான் இணைந்து நடித்த, தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ரஜினிகாந்துடன் மிக நெருக்கமான நட்பு பாராட்டி வருகிறார் குஷ்பு.
அந்தவகையில் இன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்துள்ளார் குஷ்பு. இந்த சந்திப்பிற்கு வேறு எந்த நோக்கம் இல்லை என்றும் இது சூப்பர் ஸ்டாருடன் சிரித்துப்பேசி ஒரு கோப்பை தேநீர் பருகிய ஒரு மகிழ்ச்சியான சந்திப்பு என்று குறிப்பிட்டுள்ள குஷ்பு, ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, உங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி.. நீங்கள் இப்போதும் பிரமிக்க வைக்கிறார்கள் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!