
பூஜா ஹெக்டேவை பிரமிக்க வைத்த காந்தாரா
சமீபத்தில்கூட நடிகர் ரஜினிகாந்த் இந்த படம் குறித்து இந்திய சினிமாவின் தலைசிறந்த படைப்பு என தனது பாராட்டுகளை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்து ரசித்துள்ள நடிகை பூஜா ஹெக்டே, இந்தப்படம் எனக்குள் ஏற்படுத்திய பிரமிப்பையும் சந்தோசத்தையும் பகிர்ந்து கொள்ளும் விதமாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “உங்களுக்கு (ரிஷப் ஷெட்டி) என்ன தெரிந்ததோ அதை எழுதுங்கள்.. உங்களுடைய இதயத்துக்கு நெருக்கமாக உள்ள கதைகளை உங்கள் இதயத்தில் இருந்து சொல்லுங்கள். கடைசி 20 நிமிடம் இந்த திரைப்படம் என்னை சில்லிட வைத்து விட்டது. அந்த நேரத்தில் நான் திக்பிரமை பிடித்தவனாக ஆகிவிட்டேன். கோலா, பூதங்கள், தெய்வங்கள் என எனது சிறு வயது நினைவுகளுக்கே நான் சென்றுவிட்டேன்.. அவற்றை ஒரு திரைப்படமாக மிகவும் மரியாதையாகவும் அழகாகவும் காட்டியுள்ளீர்கள். உங்களிடம் அதிக சக்தி இருக்கிறது.. தொடர்ந்து மேலே செல்லுங்கள்” என்று கூறியுள்ளார்




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!