
அல்லு அரவிந்த் தயாரிப்பில் தெலுங்கில் நடிக்கும் காந்தாரா ஹீரோ
அந்தவகையில் இந்த படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் ஐதராபாத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது, “தெலுங்கில் எனது தயாரிப்பில் ரிஷாப் ஷெட்டி ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என அவரிடம் கேட்டேன். எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே ஒப்புக் கொண்டார். அதற்கேற்ற கதையும் காலமும் கனிந்து வரும்போது அதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும்” என்று கூறியுள்ளார்.
அதேசமயம் ரிஷாப் ஷெட்டி தனது அடுத்த படம் பற்றி கூறும்போது, அது என் கையில் இல்லை. கடவுளின் கையில் தான் இருக்கிறது என்று தத்துவார்த்தமாக பதில் கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!