
தமிழில் வெளியாகும் பிளாக் பேந்தர் 2
முதல் பாகத்தில் சூப்பர் ஹீரோ தங்கள் இனத்தவர் வாழ வகாண்டா என்ற சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். இந்த பாகத்தில் வகாண்டா சாம்ராஜ்யத்தை வல்லரசுகள் இணைந்து வீழ்த்த பார்க்கிறது. அதனை சூப்பர் ஹீரோயின் எப்படி முறியடிக்கிறார் என்கிற கதை.
இந்த பாகத்தில் சூப்பர் ஹீரோ இல்லை, சூப்பர் ஹீரோயின். வகாண்டா நாட்டின் ராணியாக ஆஞ்சலா பாஷ்ட்டும், சூப்பர் ஹீரோயினாக லடிஷா ரைட்டும் நடித்திருக்கிறார்கள். படம் வருகிற நவம்பர் மாதம் 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!