
கதை பதிவு: முடிவுக்கு வந்தது எழுத்தாளர், இயக்குனர் சங்க மோதல்
இதுகுறித்து இயக்குனர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: எழுத்தாளர் சங்கத்திற்கும், நமது சங்கத்திற்கும் நடைமுறையில் இருந்த கதைப்பதிவு ஒப்பந்தம் புதுப்பிக்காததாலும், உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை கட்டனம் மற்றும் கதை பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டதாலும் இயக்குனர் சங்க உறுப்பினர்கள் நமது சங்கத்திலேயே கதையை பதிவு செய்யலாம் என முடிவு செய்தோம். இந்த நிலையில் எழுத்தாளர்சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் நமது சங்க நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து அனைத்து பிரச்னைகளையும் சமூகமாக முடித்து தருகிறோம். எழுத்தாளர் சங்கத்தின் ஆணி வேரான கதை பதிவை எழுத்தாளர் சங்கத்திற்கே தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் அனைத்து கட்டணங்களையும் கணிசமாக குறைப்பதாக கூறினார். கதை தொடர்பான பிரச்னை ஏற்பட்டால் தன்னிச்சையாக செயல்படாமல் பெப்சி அமைப்புடன் இணைந்து செயல்படுவதாக கூறியிருக்கிறார். எனவே இரு சங்கமும் இணைந்து செயல்படும் நோக்கோடு எழுத்தாளர் சங்கத்தின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. இனி இயக்குனர்கள் தங்கள் கதையை எழுத்தாளர் சங்கத்திலேயே பதிவு செய்யலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!