
நாடகத்தில் குரல் கொடுத்த ஸ்ருதிஹாசன்
இந்த நிறுவனம் வெளியிடும் பிரத்யேகமாக ஆடியோ நாடகங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக "தி சான்ட்மேன்: ஆக்ட்" எனும் பெயரிலான ஆடியோ நாடகத்திற்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் இந்த நாடகத்தின் 3வது பாகம் இந்தியாவில் வெளியாக உள்ளது. இதில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். அதாவது குரல் கொடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக நடிகை ஸ்ருதிஹாசன் கூறியிருப்பதாவது: இசை கலைஞராக தொடரும் என்னுடைய பயணத்தில் "தி சான்ட்மேன்: ஆக்ட்" போன்ற ஆடியோ வடிவிலான நாடகத்தில் பின்னணி பேச வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அது தற்போது நனவாகி இருக்கிறது. இந்த ஆடியோ நாடகத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் நீல் கியாமனின் மிகப்பெரிய ரசிகை நான். நீல் கியாமன் எழுதிய தி சான்ட்மேன் எனும் ஆடியோ நாடகத் தொடரில் ஒரு சிறிய பகுதியாக என்னுடைய பங்களிப்பை வழங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!