
ஆடை சர்ச்சை : இருளுக்குள் தள்ளுவதாக பாவனா வேதனை
இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா வழங்கியது. இந்த விழாவில் கலந்து கொண்ட பாவனா அணிந்திருந்த உடை சமூக வலைதளத்தில் மிகப்பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டு ட்ரோல் செய்யப்பட்டது. அதாவது அந்த உடையில் பாவனா ஆடைக்கு உள்ளே எந்த உடையும் அணியவில்லை என்று பலரும் கமெண்ட் கொடுத்து மோசமாக விமர்சித்தார்கள்.
அதையடுத்து அதற்கு பாவனா சோசியல் மீடியாவில் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில், என்னுடைய சருமத்தின் நிறத்தில் நான் ஆடை அணிந்திருந்தேன். இதுபோன்ற உடைகளை பயன்படுத்தும் நபர்களுக்கு அதன் உண்மை தெரியும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதோடு நான் என்ன செய்தாலும் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி என்னை விமர்சிப்பதன் மூலம் என்னை இவர்கள் மீண்டும் இருளுக்குள் தள்ளுவதை உணர்கிறேன். இது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற செயல்கள் மூலம் தான் அவர்கள் மகிழ்ச்சி காண விரும்புகிறார்கள் என்றால் நான் அதை தடுக்கவில்லை என்றும் ஒரு பதிவு போட்டு உள்ளார் பாவனா.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!