
அப்பா ரஜினிகாந்த் கடவுளின் அற்புத குழந்தை - சவுந்தர்யா
ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா முதல் கணவரை விட்டுப் பிரிந்த பிறகு நடிகரும், தொழிலதிபருமான விசாகனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பத்து நாட்களுக்கு முன்பு தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததைப் பற்றியும், குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி எனப் பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று கையில் குழந்தையுடனும், பின்னால் அப்பா ரஜினிகாந்த் நிற்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு, “என்னுடைய பிறந்தநாளுக்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இந்த ஆண்டில் கடவுள் எனக்குக் கொடுத்த சிறந்த பரிசு, எனது வீர் பாப்பா. எனக்குப் பின்னால் கடவுளின் இந்த அற்புத குழந்தை எப்போதும் இருப்பது, வாழ்க்கை ஒரு உண்மையான ஆசீர்வாதம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!