
11 நிமிடத்தில் விற்று தீர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி டிக்கெட்
செப் 19, 2022
Advertisement
சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் உட்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். சமீபத்தில் கனடா நாட்டுக்கு சென்று இசை நிகழ்ச்சி நடத்திவிட்டு நாடு திரும்பிய ரஹ்மான், அடுத்தபடியாக 2023ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி மலேசியா நாட்டில் ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்த போகிறார். கோலாலம்பூர் புக்ரித் ஜெலீஸ் என்ற ஸ்டேடியத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான டிக்கெட் புக்கிங் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. துவங்கிய 11 நிமிடத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!