
கேப்டன் மில்லர் புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ்
செப் 19, 2022
Advertisement
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் 7ம் தேதி முதல் தென்காசியில் நடைபெற இருக்கிறது. மேலும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுந்தீப் கிஷான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் நடிகர் தனுஷ் கேப்டன் படத்திற்காக நீளமான முடியையும், தாடியும் வளர்த்து வருகிறார். தனது தற்போதைய புகைப்படத்தை சமூகவலைதளத்தில் தனுஷ் பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!