
பஞ்சாயத்துக்குப் பிறகு தரப்படும் லைகர் நஷ்ட ஈடு
முதல் நாளிலேயே படம் அடி வாங்கியதால், படத்தை வாங்கிய தெலுங்கு வினியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அதனால், நஷ்ட ஈடு வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சார்மி கவுரிடம் பேசியதாகவும், ஆனால், அவர் சரியாகப் பிடி கொடுத்து பேசவில்லை என்றும் சொன்னார்கள். அடுத்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் பூரி ஜெகன்னாத்திடமும் முறையிடும் வேலைகளும் நடந்தன. அவரை சந்திக்க மறுத்தால் தெலுங்கு பிலிம் சேம்பரிடம் புகார் அளிக்கப் போவதாக வினியோகஸ்தர்கள் முடிவெடுத்திருந்தார்கள்.
இந்நிலையில் தயாரிப்பாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடந்து முடிந்துள்ளது. நேற்று முதல் வினியோகஸ்தர்களுக்கு ஏரியா வாரியாக நஷ்டத் தொகையை வழங்கி வருவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வெளிவந்த "ஆச்சார்யா" படத்தின் படுதோல்விக்குப் பிறகு இப்படி நஷ்ட ஈடு வழங்கப்பட்டது. அதற்கடுத்து "லைகர்" படத்திற்கு வழங்கப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!