
கிருஷ்ணம் ராஜு மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை ; லாரன்ஸ் வருத்தம்
இதுகுறித்து அவர் கூறும்போது, “ரிபெல் ஹீரோ கிருஷ்ணம் ராஜுவை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். அவர் தன்னுடைய சொந்த குழந்தைகள் போலவே ஒவ்வொருவரையும் அக்கறை எடுத்து கவனிப்பார். அதுமட்டுமல்ல ஒரு தாயைப்போல தானே அருகில் இருந்து உணவு பரிமாறுவார். அந்த அன்பையும் கவனிப்பையும் நான் மிஸ் பண்ணுகிறேன். என்னுடைய துரதிர்ஷ்டம் நான் அவருடைய உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த முடியாத தூரத்தில் படப்பிடிப்பில் இருந்தேன். அவருடைய அந்த பெருமை பிரபாஸ் மூலமாக எப்போதுமே உயிருடன் இருக்கும்” என்று கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்.
ராகவா லாரன்ஸ் தெலுங்கில் பிசியாக இருந்த சமயத்தில் பிரபாஸை வைத்து ரிபெல் என்கிற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!