
புஷ்பா பாடலுக்கு நடனமாடிய குட்டீஸ்கள் : பார்க்கத் துடிக்கும் ராஷ்மிகா?
படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டானது. படத்தில் "சாமி சாமி…" என்ற பாடலுக்கு ராஷ்மிகா நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்தார். அவருடைய ஒவ்வொரு மூவ்மென்ட்டும் அவ்வளவு அட்டகாசமாக இருந்தது. கிளாமராக இருந்தாலும் அதையெல்லாம் மீறி பாடல் வரவேற்பைப் பெற்றது.
அப்பாடலின் ஹிந்திப் பதிப்பிற்கு சில பள்ளிக் குழந்தைகள் நடனமாடிய வீடியோ ஒன்றை ரசிகர் ஒருவர் நேற்று பதிவிட்டு ராஷ்மிகாவை டேக் செய்திருந்தார். அதில் ஒரு சிறுமி அட்டகாசமாக நடனமாடியிருந்தார். அந்த வீடியோவைப் பகிர்ந்த ராஷ்மிகா, “என்னுடைய இன்றைய நாள் இதுதான். இந்த க்யூட்டியை நான் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன், எப்படி ?” எனக் கேட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!