
தெலுங்கில் நேனே வஸ்துன்னாவாக வெளியாகும் நானே வருவேன்
இப்படத்தை தெலுங்கில் "நேனே வஸ்துன்னா" என்ற பெயரில் வெளியிட உள்ளார்கள். நடிகர் அல்லு அர்ஜுனின் அப்பா அல்லு அரவிந்த் அவரது தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை வெளியிட உள்ளார். இது பற்றிய தகவலை "நானே வருவேன்" தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
இயக்குனர் செல்வராகவன் தெலுங்கு ரசிகர்களிடம் ஏற்கெனவே அறிமுகமானவர் தான். மேலும், தற்போது தனுஷும் பான் இந்தியா நடிகராக உள்ளதால் "நேனே வஸ்துன்னா" படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
இதனிடையே நானே வருவேன் படத்தின் டீசரை நாளை(செப்., 15) வெளியிடுவதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!