
ஆர்யா இல்லையேல் கேப்டன் இல்லை: சக்தி சவுந்தர்ராஜன்
இந்த நிலையில் ஆர்யா இல்லையேல் கேப்டன் படம் இல்லை என்று இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன் கூறியிருக்கிறார். இதுகுறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது: ‛‛ஒவ்வொரு படத்திற்கும் ஒரு ஆரம்ப புள்ளி இருக்கும் அந்த கணத்திலிருந்தே அதன் மொத்த பயணமும் தொடங்கும். கேப்டன் படத்தை பொறுத்தவரை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடும்படியான ஒரு படைப்பை, இது வரை பார்த்திராத விஷுவல்களுடன் புதிய ஆக்சனுடன் பிரமாண்டமாக தர வேண்டுமென்பதாக இருந்தது.
முதலில் இது சாத்தியமில்லை என்றே நினைத்தேன். ஆனால் ஆர்யா தந்த ஆதரவு எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை தந்தது. என் மீது அவர் வைத்த முழுமையான நம்பிக்கையில் தான் நான் இந்த படைப்பை உருவாக்க முடிந்தது. ஒரு படத்தின் பட்ஜெட்டை விட இயக்குநருக்கும், நடிகருக்கும் உள்ள சுமூகமான உறவால் தான் ஒரு அருமையான படம் உருவாக முடியும். அந்த வகையில் ஆர்யாவுடன் டெடி படத்தில் பணியாற்றும்போதே ஒரு சகோதரர் போன்ற உறவு உண்டாகிவிட்டது. இந்தப்படத்தில் அவரது உழைப்பும், அர்ப்பணிப்பும் அபாரமானது. ஆர்யா இல்லையேல் கேப்டன் இல்லை என்றுதான் சொல்வேன். இந்தப் படம் முன்னெப்போதிலும் இல்லாத ஒரு முழுமையான திரையரங்கு அனுபவமாக இருக்கும்"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!