
இசை வெளியீட்டு விழா : ஹெலிகாப்டரில் வந்திறங்கும் சிம்பு - கவுதம் மேனன்
இதனிடையே லேட்டஸ்ட்டாக இந்த விழாவிற்கு நாயகன் சிம்பு, இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார்களாம். இதற்காக கடந்த சில நாட்களாக ஒத்திகையும் நடந்துள்ளது. மாநாடு படத்தின் வெற்றிக்கு பின் சிம்பு நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் என்பதாலும், கவுதம் - சிம்பு படம் என்பதாலும் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அதனால் இசை வெளியீட்டு விழாவையும் இப்படி பிரம்மாண்டமாய் நடத்துகின்றனர். இந்த நிகழ்ச்சி டிவி ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளது. வெந்து தணிந்தது காடு படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!