
பிரபாஸின் புராஜக்ட் கே படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தென்னிந்திய ஸ்டார்ஸ் ?
தீபிகா படுகேனே கதாநாயகியாக நடிக்க, அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தெலுங்கு, ஹிந்தி என இரு மொழிகளுக்கும் பிரபலமான நட்சத்திரங்கள் படத்தில் இருக்கிறார்கள்.
தென்னிந்திய மொழிகளுக்காக மேலும் சில நடிகர்களை சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைக்க உள்ளார்கள் என ஒரு தகவல் பரவி வருகிறது. தமிழ்த் திரையுலகத்திலிருந்து சூர்யா, மலையாளத்திலிருந்து துல்கர் சல்மான், மேலும் தெலுங்கு ஸ்டார் ஆன மகேஷ் பாபு ஆகியோரும் நடிக்கப் போகிறார்கள் என சொல்லி வருகிறார்கள். இது உண்மையா, வதந்தியா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!