
அருண் விஜய்யின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ்
அருண் விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த "யானை" படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து அவர் நடித்து முடித்து கொரானோ தாக்கம் காரணமாக வெளியாகாமல் இருந்த சில படங்களை அடுத்தடுத்து வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். அந்த விதத்தில் ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள "சினம்" படம் செப்டம்பர் மாதம் 16ம் தேதியும், அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள "பார்டர்" படம் அக்டோபர் 5ம் தேதியும் வெளியாக உள்ளது. இதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அருண் விஜய், விஜய் ஆண்டனி இணைந்து நடித்துள்ள "அக்னிச் சிறகுகள்" படமும் அப்படங்களுக்குப் பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!