
குஷ்பு என்ற பெயர் வந்தது இப்படிதான்: அவரே கூறும் காரணம்
அண்ணனுக்கு நடிகை ஹேமமாலினி மற்றும் அவர்களது குடும்பம் நல்ல பழக்கம். அதனால் அவருடன் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி செல்வோம். அங்குதான் அவர்கள் வீட்டில் இட்லி, தோசை எல்லாம் சாப்பிடுவேன். அப்படி ஒருமுறை சென்றபோதுதான் தயாரிப்பாளர்கள் ரவி சோப்ரா மற்றும் அவரது தந்தை பி.ஆர். சோப்ரா வந்திருந்தார்கள். என்னைப் பார்த்ததும் இந்த பெண் நடிப்பாளா எனக் கேட்டார்கள். நான் நடிச்சா என்ன தருவீங்க எனக் கேட்டேன். உனக்கு என்ன வேணும் என அவர்கள் கேட்கவும் தினமும் ஒரு கப் வெண்ணிலா ஐஸ்க்ரீம் என பதில் அளித்தேன். இது நடந்தபோது எட்டு வயது. அவர்கள்தான் என்னுடைய பெயரை குஷ்பு என மாற்றினார்கள். இஸ்லாத்தில் நிக்கத் எனதான் பெயர் உண்டு. என்னுடைய பெயர் நக்கத் என்பது பெர்ஸிய மொழி சார்ந்ததாக இருந்தது. அதனால் அதற்கு ஈடான ஹிந்தி பெயரை "குஷ்பு" என எனக்குச் சூட்டினார்கள்” என்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!