
ஹீரோவாக களம் இறங்குகிறார் சின்னத்திரை நடிகர் சித்து
"திருமணம்" என்ற தொடர் மூலம் மக்களிடம் பிரபலமான சித்து சித், தற்போது "ராஜா ராணி 2" தொடரில் ஹீரோவாக நடித்து வருவதோடு, தமிழ் ரசிகர்களின் பேவரைட் சின்னத்திரை ஹீரோவாகவும் உயர்ந்துள்ளார். சுமார் 6 ஆண்டுகளாக நடன கலைஞராக பணியாற்றிய இவர் பின் நடிகர் வாய்ப்பை பெற்றவர், திருமணம் தொடர் மூலமாக மக்களிடம் பிரபலம் ஆனார்.
சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு திருவண்ணாமலையில் இருந்து வந்து இன்று தனக்கென்று தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருக்கும் சித்து சித் தனது அடுத்த இலக்காக வெள்ளித்திரையை நோக்கி பயணிக்க தயாராகி வருகிறார். சில திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு தேடி வந்துள்ளது. எனவே விரைவில் வெள்ளித்திரையில் சித்து சித் ஹீரோவாக களம் இறங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் சித்து சித் எடுத்த புகைப்படங்கள் வைரலானது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!