
புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2 வரிசையில் இடம் பெறுமா லைகர் ?
அப்படி வரும் படங்களில் சில படங்கள் மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்து பல கோடிகளை வசூலிக்கிறது. கடந்த பத்து மாத காலத்திற்குள் மற்ற மொழிகளில் தயாராகி தமிழில் டப்பிங் ஆகி வெளியான படங்களில் "புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2" ஆகிய படங்கள் தமிழிலும் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்று லாபகரமான படமாக அமைந்தது. ஆனால், அப்படி வெளியான வேறு சில படங்கள் இங்கு பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தி வசூலைத் தரத் தவறிவிட்டன.
குறிப்பாக பிரபாஸ் நடித்து தெலுங்கில் தயாராகி இங்கு டப்பிங் ஆகி வெளிவந்த "ராதே ஷ்யாம்", அமீர்கான் நடித்து ஹிந்தியில் தயாராகி இங்கு டப்பிங் ஆகி வெளிவந்த "லால் சிங் சத்தா", சுதீப் நடித்து கன்னடத்தில் தயாராகி இங்கு வெளிவந்த "விக்ராந்த் ரோணா" படங்கள் இங்கு தோல்வியைத் தழுவின.
அடுத்து விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடிப்பில் பூரி ஜெகன்னாத் இயக்கியுள்ள "லைகர்" படம் நாளை(ஆக.,25) பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியாகிறது. தமிழகத்தில் மட்டும் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாக உள்ளது. விஜய் தேவரகொண்டாவுக்கு இங்கும் ரசிகர்கள் உண்டு. அவர்களைக் கவர்ந்து "லைகர்" ரசிகர்களின் லைக்குகளைப் பெறுமா என்பது நாளை தெரிந்துவிடும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!