
மீண்டும் மருமகன் படத்தை தயாரிக்கும் மாமியார்
இந்த நிலையில் தற்போது மீண்டும் மருமகன் நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்கிறார் சுஜாதா. இதனை அறிமுக இயக்குனர் ஆன்டனி இயக்குகிறார், இதில் ஜெயம்ரவி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.
ஜெயம்ரவி தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார், பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் அகிலன் என்ற படத்திலும், அகமது இயக்கத்தில் இறைவன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்துக் கொடுத்து விட்டு மாமியார் படத்தில் இணைகிறார் ஜெயம்ரவி.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!