
பொன்னியின் செல்வன் குரல் : தமிழில் கமல்ஹாசன், தெலுங்கில் சிரஞ்சிவி ?
நிகழ்ச்சியில் பேசிய மணிரத்னம், தெலுங்குத் திரையுலகின் சீனியர் நடிகரான சிரஞ்சீவிக்கு நன்றி என்று பேசினார். மேலும் அது பற்றி பேசவில்லை. அதனால், நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு இந்த "பொன்னியின் செல்வன்" படத்தில் சிரஞ்சீவி எந்த விதத்தில் தொடர்பாகி உள்ளார் என்று யோசித்தனர். படத்தில் அறிமுகக் காட்சியில் பின்னணிக் குரல் மூலம் கதையை ஆரம்பிக்கிறார்களாம். அதற்காக தமிழில் கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவி குரல் கொடுத்துள்ளார். எனவேதான் மணிரத்னம், சிரஞ்சீவிக்கு நன்றி சொன்னதாகத் தெரிகிறது.
மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இது போன்று சீனியர் நடிகர்களைத்தான் பேச வைத்துள்ளார்களாம். விரைவில் அது பற்றிய தகவல் வெளியாகலாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!