
வெளியானது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 புரோமோ, தமிழில் எப்போது ?
விரைவில் ஆரம்பமாக உள்ள இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வு முடிந்துவிட்டதாகத் தெரிகிறது. கடந்த சீசன்களைப் போலவே இந்த சீசனிலும் பரபரப்பான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.
தமிழில் கடந்த ஐந்து சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கினார். அடுத்து ஆறாவது சீசனையும் அவரே தொகுத்து வழங்க உள்ளார். தெலுங்கில் புரோமோ வரை வந்துவிட்டார்கள். ஆனால், தமிழ் பிக்பாஸ் பற்றி எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் இது பற்றிய அறிவிப்பு வரலாம் எனத் தெரிகிறது.
"விக்ரம்" படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க உள்ளார், சில படங்களைத் தயாரிக்க உள்ளார். இரண்டு வருடங்களாக நின்று போன "இந்தியன் 2" படமும் மீண்டும் ஆரம்பமாக உள்ளது. அவற்றிற்கிடையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எப்படி நேரத்தை ஒதுக்குவார் என்றும் கேள்வி எழுந்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!