
ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம்
இந்நிகழ்ச்சியில் லால் சிங் சத்தா படத்தில் நீங்கள் நடித்திருக்கும் வேடத்தில் முதலில் கமிட்டாகி இருந்த விஜய் சேதுபதி விலகியதற்கான காரணம் என்ன? என்று அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நாகசைதன்யா கூறுகையில், இந்த படத்தில் ஆமீர்கானின் நண்பராக முதலில் விஜய் சேதுபதி தான் ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் லால் சிங் சத்தா படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீட்டிக்கப்பட்டதால், பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதியால் இப்படத்திற்கு அவர்கள் கேட்ட தேதியில் கால்சீட் கொடுக்க முடியவில்லை. அதன் காரணமாகவே இந்த படத்தில் இருந்து அவர் விலகிக்கொண்டார். அப்படி அவர் விலகியதன் காரணமாகவே அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இப்படத்திலும் நான் ஒரு தெலுங்கு பேசும் ஆந்திரா பையனாகவே நடித்துள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார் நாகசைதன்யா.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!