
ஐடி ரெய்டு இயல்பான ஒன்று ; அதில் பின்புலம் இல்லை - கார்த்தி
விழாவில் பங்கேற்ற கார்த்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி : மதுரை என்றாலே ஸ்பெசல் தான். விருமன் 12ம் தேதி ரிலிஸ் ஆகவுள்ளது. கடைக்குட்டி சிங்கத்திற்கு பின் கிராமம் சார்ந்த படம் , கிராமத்தில் உள்ள வீரம், பாசம், கேளிக்கை என்பதே வேறுவகையில் இருக்கும். இது போன்ற கிராமம் சார்ந்து இங்கு வரும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஒரே இயக்குனரிடம் இரு முறை நடித்துள்ளேன். இந்த நிகழ்ச்சி திருவிழா போல உள்ளது. மதுரை சார்ந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் மதுரையில் வைத்தது தான் சிறப்பு. சினிமாத்துறை சார்ந்த இடங்களில் நடைபெறும் ஐடி ரெய்டு இயல்பான ஒன்றுதான். மூன்றாண்டுக்கு ஒரு முறை நடப்பது தான். அதில் பின்புலம் இருப்பதாக தெரியவில்லை. தமிழ் சினிமாத் துறையினர் மீதான ரெய்டுகள் மட்டும் பெரிதாக செய்தி ஆகி விடுகிறது.
இவ்வாறு கார்த்தி கூறினார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!