
அரபு நாடுகளில் சீதா ராமம் படத்திற்குத் தடை
மலையாள நடிகரான துல்கர் சல்மானின் மிகப் பெரிய வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இப்படத்திற்கு அரபு நாடுகள் தடை விதித்துள்ளன. மதம் சார்ந்த சென்சிட்டிவ்வான விஷயங்கள் படத்தில் இடம் பெற்றுள்ளது என பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவை படத்திற்கு தடை விதித்துள்ளன.
துல்கர் சல்மான் நடித்து வெளிவந்த "குரூப்" படத்திற்கும் இதே போல்தான் அந்த நாடுகள் தட விதித்தன. இருப்பினும் படக்குழுவினர் மீண்டும் சென்சாருக்கு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது. அரபு நாடுகளில் மலையாள நடிகர்களுக்கு தனி வரவேற்பு உண்டு. அங்கு லட்சக்கணக்கான மலையாளிகள் வசித்து வருகிறார்கள். எனவே, அங்கு படம் வெளியாகாமல் போனால் வசூலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!