
மண்சார்ந்த படங்களையே ஹீரோக்கள் விரும்புகின்றனர் - முத்தையா
பண்பாடு மாறாமல் மண் சார்ந்த மரபுகளம் மாறாத படம் இது. குடும்ப உறவுகளை எடுத்துரைக்க கூடிய திரைப்படமாக விருமன் திரைப்படம் அமையும். இதுவரை ஆடியோ ரிலீஸ் வைக்காத நிலையில் இந்த படத்திற்கு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை மதுரையில் வைத்துள்ளேன். நான் பிறந்த மதுரை மண்ணில் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி வைத்திருப்பது பெருமையாக உள்ளது. நான் சினிமாவில் ரசித்தவர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். நான் இது போன்ற மண்சார்ந்த கதைக்களத்தை கடந்து திரைப்படம் ஆசைப்படுகிறேன். இயக்குனராக எனக்கே என்னுடைய படங்கள் போட்டியாக உள்ளது. என்னுடைய திரைப்படம் எந்த பின்புலமும் இன்றி எடுக்கப்படுகிறது. சிலர் பின்புலம் இருப்பதாக தவறுதலாக புரிந்து கொண்டுள்ளனர். மொழி போன்ற படங்களை எடுக்க எனக்கும் ஆசை தான். ஆனால் என்னிடம் வரும் ஹீரோக்கள் மண்சார்ந்த படங்களை இயக்குவதற்கே விரும்புகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!