
தி லெஜன்ட் - அதிகாலை காட்சிகள், 5 மொழிகளில் வெளியீடு
பிரபல விளம்பரப் பட இயக்குனர்களும், அஜித் நடித்த "உல்லாசம்" மற்றும் விக்ரமாதித்யா, ஷெரின், காயத்ரி ரகுராம் நடித்த "விசில்" படத்தையும் இயக்கிய ஜேடி - ஜெர்ரி இப்படத்தை இயக்கியுள்ளார்கள். சுமார் 19 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு அவர்கள் இப்படத்தை இயக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
ஒரு ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்காக துபாய், மும்பை, ஐதராபாத் என பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தியுள்ளார் சரவணன். ஆனால், சென்னையில் மட்டும் நடத்தவில்லை. இசை வெளியீட்டுடன் நிறுத்திக் கொண்டார். மற்ற முன்னணி நடிகர்களின் படங்களைப் போல இப்படத்திற்கும் நாளை அதிகாலை 4 மணி காட்சி, 8 மணி காட்சி ஆகியவை நடக்கின்றன. இது தமிழ் திரையுலகத்தினரை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!