
இரண்டு ஓடிடி தளங்களில் ஆர்ஆர்ஆர் உரிமை : திரையுலகினர் அதிர்ச்சி
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள பதிப்புகள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்திலும் நேற்று முதல் தனது ஒளிபரப்பை ஆரம்பித்தது. முதலில் ஜீ 5 நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இந்த நான்கு மொழி உரிமைகளும் மற்றுமொரு போட்டி நிறுவனத்திற்கும் மாறியது குறித்து திரையுலகில் அதிர்ச்சியும் சர்ச்சையும் எழுந்தது.
முதலில் உரிமையை வாங்கிய ஜீ 5 நிறுவனம் தான் தனது உரிமைகளை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கும் "ஷேர்" செய்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த "ஷேர்" உரிமை விற்பனை மூலம் அந்த நிறுவனம் மேலும் சில பல கோடிகளைப் பெற்றுள்ளதாம். இந்த "ஷேர்" உரிமை விற்பனையால் படத்தின் தயாரிப்பாளருக்கு எந்த வருமானமும் இல்லையாம்.
எனவே, இனி வரும் காலங்களில் ஓடிடி உரிமைகளுக்காகப் போடப்படும் ஒப்பந்தங்களில் சில மாற்றங்களைச் செய்தாக வேண்டும் என தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளார்களாம். அப்படி மாற்றி விற்கும் போது தயாரிப்பாளர்களுக்கும் வருமானம் வரும் வகையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என பல தயாரிப்பாளர்கள் பேசி வருகிறார்களாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!