
நரேனுடன் நெருக்கமாகும் மீரா ஜாஸ்மின்: வைரலாகும் புகைப்படங்கள்
அதைத்தொடர்ந்து அடுத்த இரண்டு வருடங்களிலேயே மீரா ஜாஸ்மின் அவர் கணவரை விட்டு பிரிகிறார் என்கிற செய்தியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதுபற்றி இப்போது வரை மீரா ஜாஸ்மின் எந்தவிதமான கருத்தும் கூறவில்லை. அதேசமயம் மீண்டும் தற்போது சினிமாவில் நடிப்பதற்காக மும்முரமாக களமிறங்கியுள்ளனர் மீரா ஜாஸ்மின். மேலும் இதுவரை இல்லாத வகையில் தனது கவர்ச்சி புகைப்படங்களையும் சோசியல் மீடியாவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இதற்கிடையே மலையாள இயக்குனர் அருண் கோபியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், பிரபல நடிகர் நரேனுடன் மீரா ஜாஸ்மின் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டதன் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவு செய்துள்ளார். நரேனை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருப்பது போன்ற பல புகைப்படங்களை பகிர்ந்து, ‛மீண்டும் இணைவது உங்கள் பாதையை ஒளிரச் செய்யும். அரவணைப்பு மற்றும் மென்மையும் அனுபவிக்க வைக்கிறது. அந்த பொக்கிஷமான நிகழ்வுகள் மீண்டும் எழும்பியதற்கு நன்றி அன்பே நரேன்" எனவும் பதிவிட்டுள்ளார். இவரது பதிவு வைரலாகியுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!