
ஓடிடியில் நேரடியாக வெளியாகும் சிபிராஜ் படம்
படம் குறித்து இயக்குனர் கமலகண்ணன் கூறியதாவது: நம் வாழ்க்கை சக்கரத்தில் நம்பிக்கை ஒளி வந்து வந்து போகும். அதேபோல, நமது அன்றாட வாழ்க்கையும் அதே வழக்கமான முறையில்தான் இயங்குகிறது. நாம் ஒரே பாதையில் பயணிக்கிறோம், அதே நபர்களைச் சந்திக்கிறோம், ஒரே மாதிரி யோசிக்கிறோம். அதே பணிகளைச் செய்கிறோம், இதை மீண்டும் மீண்டும் நாள் முழுக்க செய்து கொண்டு இருக்கிறோம். இப்படி போய்கொண்டிருக்கும் வாழ்கையில் திடீரென ஏற்படும், ஒரு சிறிய மாற்றம் அந்த நாளை தலைகீழாக மாற்றிவிடும்.
நமது முழு பழக்க வழக்கங்களையும் கேள்விக்குள்ளாக்கும், மேலும் நம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைக்கும். நாம் மீண்டும் அந்த சக்கரத்தின் ஆரம்ப புள்ளியை அடையும்போது, நம் பழக்கவழக்கங்கள் உட்பட, ஒரு பெரிய மாற்றத்தை அடைந்து இருப்பதை நாம் காணலாம். இது தான் வட்டம் திரைப்படத்தின் மையக் கருவாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் இல்லாத பலர் மற்றவர்களுடைய வாழ்க்கையின் உள்ளே 24 மணி நேரத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும், அதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக் தான் திரைக்கதை. என்கிறார் கமலக்கண்ணன்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!