
காண்டிராக்டர் நேசமணி தலைப்பு மாற்றம்
இந்த நிலையில் காண்டிராக்டர் நேசமணி என்ற தலைப்புக்கு வடிவேலு தரப்பில் இருந்து ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது நாய் சேகர் படத்தில் நடித்து வரும் வடிவேலு, பின்னாளில் நேசமணி கேரக்டரில் தனி படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து தற்போது காண்டிராக்டர் நேசமணி என்ற டைட்டிலை "பூமர் அங்கிள்" என்று மாற்றி உள்ளனர். இதுகுறித்து தயாரிப்பு தரப்பு அளித்துள்ள விளக்கத்தில் "வடிவேலு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளதற்கு மதிப்பு அளிக்கும் விதமாக படத்தின் டைட்டிலை "பூமர் அங்கிள்" என்று மாற்றியுள்ளோம்" என்று கூறியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!