தனுஷின் முதல் படம் : துள்ளுவதோ இளமை நாளை டிஜிட்டலில் வெளியாகிறது
ஜூலை 07, 2022
Advertisement
தனுஷ் சினிமாவில் அறிமுகமான படம் ‛துள்ளுவதோ இளமை". இந்த படத்திற்கு தனுஷின் அண்ணன் செல்வராகவன் திரைக்கதை எழுத, அப்பா கஸ்தூரிராஜா இயக்கினார். ஷெரின், அபிநய், ஷில்பா உள்பட பலர் நடித்திருந்தார்கள். யுவன் இசை அமைத்திருந்தார்.
2002ம் ஆண்டு வெளியான இந்த படம் 20 வருடங்களுக்கு பிறகு நாளை (ஜூலை 8) டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் தியேட்டரில் வெளியாகிறது. குரு ராஜா இண்டர்நேஷனல் நிறுவனம் இதனை வெளியிடுகிறது. சென்னையில் பிவிஆர், ஈவிபி, மாயாஜால் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் திரைகள் உள்பட 25 தியேட்டர்களில் வெளியாகிறது. மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் வெளியாகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!