
காளி : சர்ச்சையை ஏற்படுத்திய லீனா மணிமேகலை, கொந்தளிக்கும் இந்துக்கள்
அதில் "காளி" தோற்றத்தில் ஒரு பெண் புகை பிடிப்பது போன்ற போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. டுவிட்டர் தளத்தில் "ArrestLeenaManimekalai" என்ற ஹேஷ்டேக்கில் பலரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து, லீனா மணிமேகலையைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர்.
இது குறித்து லீனா மணி மேகலை, “ஒரு மாலைப் பொழுது, டோரோண்டோ மாநகரத்தில் காளி தோன்றி வீதிகளில் உலா வரும் போது நடக்கிற சம்பவங்கள்தான் படம். படத்தைப் பார்த்தா “arrest leena manimekalai"" ஹேஷ்டேக் போடாம “love you leena manikemalai"" ஹேஷ்டேக் போடுவாங்க,” என தெரிவித்துள்ளார்.
புகார்
ஹிந்துக்கள் புனிதமாக வணங்கும் காளி தேவியை இழிவுப்படுத்தி புகைபிடிப்பது போல படம் வெளியிட்ட இயக்குனர் லீனா மணிமேகலை உள்ளிட்ட திரைப்பட குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் இந்து முன்னணி நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் இந்து முன்னணியினர் புகார் அளித்துள்ளனர்.
டில்லியில் வழக்கு பதிவு
இதேப்போன்று டில்லியிலும் லீனா மணிமேகலைக்கு எதிராக இந்த விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளத. இதையடுத்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் போஸ்டர் வெளியிட்ட லீனா மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!