
மூன்று வருடங்களுக்குப் பிறகு சாய் பல்லவியின் தமிழ் ரிலீஸ்
2018ல் வந்த "தியா" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பின் "மாரி 2, என்ஜிகே" என தமிழில் மொத்தமாக மூன்றே படங்களில்தான் நடித்துள்ளார். மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்துள்ள "கார்கி" படம் தமிழில் வரும் ஜுலை 15ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி.
கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் ஜோடியாக புதிய தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க உள்ளார் சாய் பல்லவி.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!