
என் காஷ்மீர் கனவை நனவாக்கிய சீதாராமம் ; மகிழ்ச்சியில் துல்கர் சல்மான்
கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் முகாமிட்ட படக்குழுவினர் பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். ஆச்சரியமாக காஷ்மீருக்கு துல்கர் சல்மான் பெர்சனல் ஆகவும் படப்பிடிப்பிற்காகவும் வருவது இதுதான் முதல்முறை. இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ள துல்கர் சல்மான், “சீதாராமம் படம் எனது நீண்டநாள் காஷ்மீர் கனவை நிறைவேற்றி விட்டது. இங்கு படப்பிடிப்பை நடத்தியபோது ஏதோ புகைப்படத்திற்குள்ளோ அல்லது பெயிண்டிங்கிற்குள்ளோ நுழைந்து விட்டது போன்ற உணர்வுதான் ஏற்பட்டது. அதேபோல அங்குள்ள மக்கள் எங்கள் மீது காட்டிய அன்பு பிரமிக்க வைத்தது. அங்கே படப்பிடிப்பு நடத்துவதை அறிந்து அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்ததோடு மீண்டும் இதுபோன்று தொடர்ந்து இங்கே வந்து படப்பிடிப்பை நடத்துங்கள் என்றும் கேட்டுக்கொண்டனர்” என்று தனது காஷ்மீர் அனுபவம் குறித்து பிரமிப்புடன் விவரித்துள்ளார் துல்கர் சல்மான்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!