
சுந்தர்.சி படப்பிடிப்பில் ஒரே நாளில் 2 முறை கேக் வெட்டிய பாகுபலி பிரபாகர்
இந்த படத்தில் கதாநாயகியாக லாலக் பால்வணி நடிக்க, முக்கிய வேடங்களில் தம்பி ராமையா மற்றும் பாகுபலி புகழ் காளகேயா பிரபாகர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் பிரபாகரின் பிறந்தநாளை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அதே நாளில் கொஞ்ச நேரம் கழித்து இந்தப்படத்தில் பிரபாகர் கதாபாத்திரம் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடுவது போன்று ஒரு காட்சியும் இருந்ததால் மீண்டும் படத்திற்காக ஒருமுறை கேக் வெட்டி அவர் பிறந்தநாளை கொண்டாடிய காட்சிகள் படமாக்கப்பட்டனவாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!